Pages

Sunday, March 20, 2011

இஸ்லாத்தைப் பற்றி இந்துக்களால் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்

டாக்டர் ஜாகிர் நாயக்
 (நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை)
கேள்வி எண்: 1 இந்து மதத்தில் சிலை வணக்கம் இல்லை என்பதை இந்து பண்டிதர்களும் இந்து அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மனிதன் வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் பக்குவம் வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை. சரியா?
பதில்: மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்: மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள் இஸ்லாமியர்களே! மனிதன் கடவுளை வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் நிலை வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை என்பது சரியானது எனில், மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள் இஸ்லாமியர்கள்தான். ஏனெனில் இஸ்லாமியர்களாகிய நாங்கள் அல்லாஹ்வை வணங்கும்போது, மனதை ஒருமைப்படுத்த எங்களுக்கு சிலை எதுவும் தேவையில்லை என்பதை நான் உங்களுக்கு இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1.இடி இடிப்பது ஏன்? என்று குழந்தைகள் கேட்கிறது..!
ஒரு முறை இஸ்லாமிய ஆய்வு மையத்தில், நான் ஒரு இந்து சாமியாருடன் பேசிக் கொண்டிருந்தேன். “இடி இடிப்பது ஏன்?”  என்று குழந்தைகள் கேட்டால், – “சொர்க்கத்தில் பாட்டியம்மா மாவு இடிக்கிறார்கள்,” என்று நாங்கள் சொல்வோம் என்றார். ஏனெனில் இடி போன்ற விஷயங்களை அறிந்து கொள்வதற்கு ஏற்ற வயது அவர்களுக்கு இல்லை என்ற காரணத்தையும் சொன்னார். அதுபோலவே – கடவுளை வணங்கத் துவங்கும் ஆரம்ப கட்டத்தில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது என்றும் சொன்னார்.
இஸ்லாமிய மார்க்கம் பொய் சொல்வதை விரும்புவதில்லை. அது பொய் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும் – பொய் சொல்வதை இஸ்லாமிய மார்க்கம் விரும்புவதில்லை. அதுபோல ஒரு தவறான செய்தியை நான் எனது குழந்தைக்கு ஒருபோதும் சொல்லமாட்டேன். ஏனெனில் குழந்தைகள் பள்ளிக் கூடத்திற்குச் சென்று – மின்னல் அடிக்கும்போது உருவாகும் அதீத வெப்பக் காற்றின் அதிர்வுதான் இடியின் சப்தம் என்று அறிவார்கள் எனில், ஆசிரியர் பொய் சொல்வதாக எண்ணிக் கொள்ளும். பின்னர் ஆசிரியர் சொன்னதுதான் உண்மை என்று அறிந்த பிறகு, தனது தந்தையை ஒரு பொய்யராக கருதும். குழந்தைகள் தங்கள் அறிவுக்கு எட்டாத சில விஷயங்களை புரிந்து கொள்ளமாட்டர்கள் என்று கருதுவீர்களேயானால், குழந்தைகளுக்குத் தவறான தகவல்களைத் தருவதை விட்டுவிட்டு, குழந்தைகள் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில், எளிதான முறையில் பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு, உங்களது குழந்தை கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை எனில், உங்களுக்குத் தெரியாது என்று பதிலளிக்க கூடிய தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இன்றைய காலத்து குழந்தைகள் நீங்கள் சொல்லும் பதிலில் திருப்தி அடைந்து விடுவதில்லை. தெரியவில்லை என்கிற பதிலை எனது மகனிடம் சொன்னால், “அப்பா..! நீங்க ஏன் தெரிஞ்சிக்கக் கூடாது?.,” என்று அவன் அப்போதே திருப்பிகேட்டு விடுகிறான். மேற்படி கேள்வி உங்களை உடனடியாக அறிந்து கொள்ள வைப்பதுடன், நீங்கள் அறிந்ததை உங்கள் குழந்தைக்கும் அறிய வைக்கக் கூடிய வாய்ப்பையும் உருவாக்குகிறது.
2.ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குத்தான் மனதை ஒருமைப்படுத்த சிலை தேவைப்படுகிறது -(இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்பது முதலாம் வகுப்பிலும் அதேதான். இறுதி வகுப்பிலும் அதே நிலைதான்.)
ஆரம்ப நிலையில் கடவுளை வணங்க ஆரம்பிப்பவர்களுக்குத்தான் சிலை என்ற ஒன்று தேவைப்படுகிறதேத் தவிர, அதற்கு பிந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு கடவுளை வணங்க சிலை எல்லாம் தேவையில்லை – என்று சில பண்டிதர்கள் என்னை நம்ப வைக்க முயற்சித்திருக்கிறார்கள். இவ்வேளையில் நாம் ஒரு முக்கியமான உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும், அதன் அடிப்படையில் உறுதியாக இருந்தால்தான் – பின்வரும் காலங்களில், குறிப்பிட்ட அந்த விஷயத்தில் சிறந்தவராக விளங்க முடியும். இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்பதை ஆரம்ப பாடசாலையில் கற்றுக் கொள்ளும் மாணவன், பள்ளி இறுதி வகுப்பு சென்றாலும், அல்லது கணிதவியலில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றாலும், இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்கிற அடிப்படை கணிதவியலில் எந்தவித மாற்றமும் இல்லாதவனாகத்தான் இருப்பான். இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்து என்றோ அல்லது ஆறு என்றோ மாறுவதற்குரிய வாய்ப்பே இல்லை. பின்னர் அல்ஜிப்ரா, திரிகோணமெட்ரி, லோகோரிதம் – என்று கணிதவியலின் பல பிரிவுகளை கற்றுக் கொண்டாலும், இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்கிற அடிப்படை கணிதவியலில் எந்தவித மாற்றமும் இல்லாதவனாகத்தான் இருப்பான். ஆக ஆரம்ப பாடசாலையிலேயே ஆசிரியரிடமிருந்து தவறாக கற்றுக் கொள்ளும் மாணவன், எதிர்காலத்தில் எப்படி சிறந்த விற்பன்னராக விளங்க முடியும்?.
இந்து வேதங்களின் அடிப்படை கொள்கைகள் கடவுளின் தன்மையை பற்றிச் சொல்லும்பொழுது, கடவுளுக்கு எந்தவித உருவமுமில்லை என்று சொல்கிறது. எனினும் – இது பற்றிய உண்மையை அறிந்துள்ள இந்து அறிஞர்கள் – மக்களால் பின்பற்றப்படும் தவறான இந்த வழக்கத்தை ஏன் தடுக்க முனைவதில்லை?.
நீங்கள் ஆரம்பபாடசாலையில் படிக்கும் உங்களது பிள்ளைக்கு இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்று சொல்லித் தருவீர்களா?. அல்லது இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்து என்றோ அல்லது ஆறு என்றோ சொல்லித் தந்துவிட்டு, பின்னர் உங்கள் பிள்ளை பள்ளி இறுதி வகுப்பு முடித்த பிறகு இரண்டையும், இரண்டையும் கூட்டினால் ஐந்தோ அல்லது ஆறோ அல்ல. இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்குதான் என்கிற உண்மையைச் சொல்லித் தருவீர்களா?. இது போன்று யாரும் செய்யவே மாட்டோம். மாறாக உங்களது பிள்ளை தவறான பதிலளித்தால் அதனைத் திருத்தி, சரியான பதிலைச் சொல்லித் தருவோம். அவ்வாறான தவறுகளை திருத்தவில்லை என்றால், நீங்கள் உங்களது பிள்ளையின் எதிர்காலத்தை வீணடிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
கேள்வி எண்: 2 தண்ணீர் பல மொழிகளிலும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் வாட்டர் என்றும் – ஹிந்தியில் பாணி என்றும் – மலையாளத்தில் வெள்ளம் என்றும் அழைக்கப்படுகிறது. அதுபோலத்தான் கடவுளும் அல்லாஹ் என்றும் இயேசு என்றும் ராம் என்றும் அழைக்கப்படுகின்றனர். எனவே கடவுள்கள் அனைவரும் ஒன்றுதானே?.
பதில்: 1. மிகவும் அழகிய பெயர்களுக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே..! அருள்மறை குர்ஆனின் 17வது அத்தியாயம் ஸ{ரத்துல் பனீ இஸ்ராயீலின் 110வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது:
“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்: அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்: எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.” (அல்குர்ஆன் 17:110)
நீங்கள் அல்லாஹ்வை எந்தப் பெயரிலும் அழையுங்கள். ஆனால் நீங்கள் அழைக்கக் கூடிய பெயர், அழகிய பெயராக இருக்க வேண்டும். நீங்கள் அழைக்கக் கூடிய பெயர், மனதில் எந்த உருவத்தையும் பிரதிபலிக்கக் கூடாது. நீங்கள் அழைக்கும் பெயர், அல்லாஹ்வுக்கு மட்டும் பொருந்தக் கூடிய குணநலன்களை கொண்டதாக இருக்க வேண்டும்.
2. தண்ணீரை பல மொழிகளிலும், பல பெயர்களைக் கொண்டு அழைக்கலாம். ஆனால் தண்ணீர் அல்லாத ஒன்றை தண்ணீர் என்று எந்த மொழியிலும் அழைக்க முடியாது.
தண்ணீரை பல மொழிகளிலும் பல பெயர்களைக் கொண்டு அழைக்கலாம். உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் “வாட்டர் என்றும், தமிழில் தண்ணீர் என்றும், ஹிந்தியில் பாணி என்றும், அரபியில் மோயா என்றும், சமஸ்கிருதத்தில் அபாஹ் என்றும், சுத்தமான ஹிந்தியில் ஜல் என்றும், குஜராத்திய மொழியில் ஜல் அல்லது பாணி என்றும், மராத்திய மொழியில் பந்தி என்றும், கன்னட மொழியில் நீர்
என்றும், தெலுங்கு மொழியில் நீரு என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும் தண்ணீரை பல மொழிகளில், பல பெயர்களில் அழைக்கலாம்.
தினமும் காலையில் ஒரு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும் என அவரது நண்பர் அவரிடம் அறிவுறுத்தியதாக, என்னிடம் ஒருவர் சொல்வதாக வைத்துக் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவரால் அந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை. ஏனெனில் அவர் அந்த தண்ணீரைக் குடித்தால் அவருக்கு வாந்தி வருவதாகவும் தெரிவிக்கிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றி விசாரித்ததில், அந்த தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதாகவும், துர்நாற்றம் அடிப்பதாகவும் தெரிவிக்கிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர் தண்ணீர் என்று எண்ணிக்கொண்டது, தண்ணீர் அல்ல, சிறுநீர் என்பது. ஆக தண்ணீரைத்தான் தண்ணீர் என்று சொல்ல முடியுமேத் தவிர, தண்ணீர் அல்லாத மற்றவைகளை தண்ணீர் என்று சொல்ல
முடியாது.
உதாரணங்களை, உண்மைகளாக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு அறிவிலி கூட, தண்ணீருக்கும் – சிறுநீருக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்தவனாகத்தான் இருப்பான். சிறு நீரை, தண்ணீர் என்று அழைப்பவன் ஒரு மடையனாகத்தான் இருப்பான். அதுபோலத்தான் கடவுளின் சரியான தன்மைகளை அறிந்த ஒருவன், போலியான கடவுளரை மக்கள் வணங்குவதை காணும்போது, உண்மையான கடவுளுக்கும், போலியான கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இருக்கிறார்களே என இயல்பாகவே வியந்து போகிறான்.
3. தங்கத்தின் தரத்தை – பல மொழிகளில் பல பெயர்களால் அழைக்கப்படும் அதன் பெயர்களை வைத்து மதிப்பிடுவதில்லை. மாறாக தங்கத்தின் தரத்தை, உரைகல்லில் உரைத்துப் பார்த்துதான் மதிப்பிட வேண்டும்.
தண்ணீர் பல மொழிகளில், பல பெயர்களால் அழைக்கப்படுவது போல், தங்கத்தையும் பல மொழிகளில் பல பெயர்களில் அழைக்கலாம். உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் கோல்ட் என்றும், ஹிந்தியில் சோனா என்றும், அரபியில் தகப் என்றும் தங்கத்தை பல மொழிகளில் பல பெயர்களில் அழைக்கிறோம். இருப்பினும் யாராவது ஒருவர் தன்னிடம் உள்ள தங்கத்தை, உங்களிடம் விற்பனை செய்ய விரும்பினால், உடனே அவர் கொண்டு வந்துள்ள தங்கம் 24 கேரட்தான் என்று நீங்கள் நம்பி வாங்கி விடுவதில்லை. அதன் சரியான தரத்தை அறிய பொற்கொல்லரை தேடித்தான் செல்வீர்கள். பொற்கொல்லரும் தங்கத்தை உரை கல்லில் உரைத்து பார்த்து, அது தங்கம்தானா?. இல்லையா என்று அதன் தரத்தை உங்களிடம் தெரிவித்த பின்புதான் தங்கத்தை வாங்குவீர்கள். இல்லையா?. ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல..” என்கிற பழமொழிக்கு ஏற்ப, மின்னும் மஞ்சள் உலோகத்தை எல்லாம், நாம் ஒருபோதும் தங்கம் என்று நம்பி வாங்கி விடுவதில்லை.
4. இறைத்தன்மையின் உரைகல் – ஸுரத்துல் இஃக்லாஸ்.
மின்னும் மஞ்சள் உலோகத்தை எல்லாம், நாம் ஒருபோதும் தங்கம் என்று நம்பி வாங்கி விடுவதில்லை. அதுபோல, எந்த தனி ஒருவர் கடவுள் என்று தன்னை அழைத்துக் கொண்டாலும், இறைத்தன்மை என்னும் உரை கல்லில் உரசிப் பார்க்காமல், அவரை நாம் கடவுள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறான இறைத்தன்மையின் உரைகல் அருள்மறை குர்ஆனின் 112வது அத்தியாயம் ஸுரத்துல் இஃக்லாஸ். அருள்மறை குர்ஆனின் 112வது அத்தியாயம் ஸுரத்துல் இஃக்லாஸ் கீழ்கண்டவாறு கூறுகிறது:
“(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் – அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (அவன்) எவரையும் பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.”(அல்குர்ஆன் – 112: 1-4)
5. எவரேனும் – மேற்குறிப்பிட்டபடி இறைத்தன்மைக்கு உரியவர் என்று தன்னை நிரூபித்தால் கடவுள் என்று அழைக்கலாம்:
எவராவது ஒருவர் தன்னை கடவுள் என்ற அறிவித்துக் கொள்கிறார் எனில், மேலே உள்ள நான்கு வரிகளில் குறிப்பிடப்பட்ட இறைத்தன்மைக்கு உரியவர் என்று தன்னை நிரூபித்துக் காட்டுவார்எனில், அவர் கடவுள் என்று அழைக்கப்படுவதற்கும், கடவுள் என்று வழிபடப்படுவதற்கும் தகுதியானவர் ஆவார்.
எவனாவது ஒரு பைத்தியக்காரன் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்று அழைப்பான் (அவ்வாறு அழைக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) எனில் மேலே உள்ள நான்கு வரிகளில் குறிப்பிடப்பட்ட இறைத்தன்மைக்கு உரிய உரை கல்லில் உரைத்து பார்ப்போம்.
(1) “குல்ஹு வல்லாஹு அஹது” அல்லாஹ் – அவன் ஒருவனே.
முஹம்மது (ஸல்) அவர்கள் ஒருவர் மாத்திரமா இறைத்தூதர்? இல்லை. அவர்களுக்கு முன்பு எண்ணற்ற இறைத்தூதர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
(2) “அல்லாஹு ஸமத்” அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
முஹம்மது (ஸல்) அவர்கள் தேவையுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் பல துன்பங்களுக்கு உள்ளானார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் அல்லாஹ்வின் வலிமை மிக்க இறைத்தூதராக இருந்தாலும், அவர்கள் தமது 63 ஆம் வயதில் மரணமடைந்தார்கள். மதீனாவில் அடக்கமும் செய்யப்பட்டார்கள்.
(3) “லம்யளிது வலம் யுவ்லது” (அவன்) எவரையும் பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள் என்பதும் அவர்களது தந்தையின் பெயர் அப்துல்லாஹ், அவர்களின் தாயாரின் பெயர் ஆமினா என்பதும் நாம் அனைவரும் நன்றாக அறிந்த விஷயம். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பாத்திமா (ரலி) என்ற மகளும், இபுறாகிம் (ரலி) என்கிற மகனும் இருந்தார்கள் என்பதும் நாம் அனைவரும் நன்றாக அறிந்த விஷயம்.
(4) “வலம்யகுல்லஹு – குஃபுவன் அஹது” – அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
உலகில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது மறாத அன்பு செலுத்தி, அவர்களை உயர்வாக மதித்து, அவர்கள் காட்டித்தந்த ஒவ்வொரு செயலையும் பின்பற்றி நடந்தாலும், ஒரு இஸ்லாமியன் கூட முஹம்மது நபி (ஸல்) அவர்களை – இறைவன் – என்று ஏற்றுக் கொள்ள மாட்டான். இஸ்லாமியர்கள் அடிப்படை கொள்கையே “லாயிலாஹ இல்லல்லாஹ் – முஹம்மதுர் ரஸ{லுல்லாஹ் – அதாவது வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.” என்பதாகும். இஸ்லாமியர்கள் அனைவரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது மாறாத அன்பு செலுத்தி, அவர்களை உயர்வாக மதித்து, அவர்கள் காட்டித்தந்த ஒவ்வொரு செயலையும் பின்பற்றி நடந்தாலும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும், அல்லாஹ்வின் தூதரும்தான், அல்லாஹ் அல்ல, என்பதை இஸ்லாமியர்களுக்கு உணர்த்த வேண்டி, ஒவ்வொரு நாளும் ஐந்து வேளையும், இந்த அடிப்படை கொள்கை பிரார்த்தனைக்காக அழைக்கப்படும்பொழுது, பிரார்த்தனை கூடங்களில் முழங்கப்படுகிறது.
6. நீங்கள் வணங்கும் தெய்வங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்: இறைத்தன்மைக்கு உண்டான உரை கல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இப்போது நாங்கள் உங்களுக்கு விளக்கி விட்டோம். இனிமேல் இந்த உரை கல்லை கொண்டு நீங்கள் வணங்கும் தெய்வங்கள் உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை உறுதி கொள்வது உங்களது வேலை.
கேள்வி எண்: 3. இந்து மதம் உலகில் தோன்றிய மதங்கள் எல்லாவற்றையும் விட பழமையான மதம். எனவே இந்து மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும். இல்லையா?
பதில்: 1. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் பழமையானது. இந்து மதம் உலகில் உள்ள மதங்களில் எல்லாம் பழமையான மதம் என்பது தவறான வாதம். இஸ்லாமிய மார்க்கம்தான் உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் முதலாவதாக தோன்றியதும், பழமையானதும் ஆகும். இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மார்க்கம்தான் என்றும், அதனை தோற்றுவித்தது முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் என்றும் தவறான கருத்தினை மக்கள் கொண்டுள்ளனர். இஸ்லாமிய மார்க்கம் உலகம் தோன்றிய நாள் முதலாய் இருக்கிறது. ஆதி மனிதன் இப்பூமியில் காலடி பதித்த நாள் முதலாய் இஸ்லாமிய மார்க்கம் இவ்வுலகில் தோன்றிய மார்க்கமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை தோற்றவித்தது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வல்லோன் அல்லாஹ்வின் இறுதித் தூதர் ஆவார்கள்.
2. பழமையான மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒரு மதம் பழமையானது என்பதால் மாத்திரம் அந்த மதம் ஒரு சிறந்த மதமாகவும், மிகவும் தூய்மையானதாகவும் கருதப்பட வேண்டும் என்கிற அளவுகோல் சரியானது அல்ல. இந்த அளவுகோல் எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு சுத்தமான குவளையில் தற்போது நிரப்பப்பட்டிருக்கும்  
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விட, மூன்று மாதங்களுக்கு முன்னால் பிடிக்கப்பட்டு, (வீட்டில், குளிர்சாதன பெட்டிக்கு வெளியில்) திறந்து வைக்கப்பட்ட தண்ணீர்தான் சுத்தமானது என்று ஒருவர் சொல்வதை போன்று இருக்கிறது.
3. அதுபோல புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.
அதுபோல ஒரு மதம் புதிதாக தோன்றியது என்கிற காரணத்தால் மாத்திரம் அந்த மதம் ஒரு சிறந்த மதமாகவும், மிகவும் தூய்மையானதாகவும் கருதப்பட வேண்டும் என்கிற அளவுகோலும் சரியானது அல்ல. மூன்று மாதங்களுக்கு முன்னால் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பாட்டில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், தற்போது பிடிக்கப்பட்ட கடல் தண்ணீரை விட சுத்தமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
4. ஒரு மதம் தூய்மையானதாகவும், சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் எனில், இறைவனால் அருளப்பட்ட அந்த மதத்தின் வேதங்களில், எந்தவித இடைச்செருகலோ, கூடுதலோ, குறைவோ செய்யப்பட்டிருக்கக் கூடாது.
ஒரு மதம் தூய்மையானதாகவும், சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் எனில், இறைவனால் அருளப்பட்ட அந்த மதத்தின் வேதங்களில், எந்தவித இடைச்செருகலோ, கூடுதலோ, குறைவோ செய்யப்பட்டிருக்கக் கூடாது. இறையுணர்வின் பிறப்பிடம், மற்றும் இறைக் கட்டளைகள் இறைவனிடமிருந்து வந்ததாகத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு உலகில் இருக்கும் வேதங்களில் அருள்மறை குர்ஆன் மாத்திரம்தான் அது அருளப்பட்ட விதத்திலேயே (மனித கரங்களால் எந்தவித மாறுதல்களும் செய்யப்படாமல்) பாதுகாக்கப் பட்டிருக்கிறது. மற்ற மதங்களின் வேதங்கள் யாவும், கூட்டப்பட்டும், குறைக்கப்பட்டும், இடைச்செருகல்கள் செருகப்பட்டும்தான் இருக்கிறது. அருள்மறை குர்ஆனை மனனம் செய்த லட்சக்கணக்கான உலமாக்களின் மனப்பாட வடிவில் – அருள் மறை குர்ஆன் – அது அருளப்பட்ட வடிவில் – இன்றும் பாதுகாக்கப்பட்டு உள்ளது. அத்தோடு, நபித்தோழர் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள், தற்போது தாஷ்கன்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் உள்ள கொப்தாகி(KOPTAKI)  அருங்காட்சியகத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதிகளோடு, நம்மிடம் உள்ள அருள்மறை குர்ஆனை ஒப்பிட்டு பார்த்தால், ஒரு சிறிய மாற்றத்தையும் காணவே முடியாது. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:
“நிச்சயமாக நாம் தான் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்: நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலானகவும் இருக்கின்றோம்.” (அல்குர்ஆன் 9:15)
5. பழமையான மதம்தான் மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒரு மதம் சிறந்த மதமாக இருக்கிறது என்பதற்கு காரணம், அது பழமையான மதம் என்கிற அளவுகோல் சரியானது அல்ல. 1998 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டொயோட்டோ காரைவிட 19ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட கார்தான் சிறந்த கார், ஏனென்றால் அது பழைய கார் என ஒரு மனிதன் சொல்வது போன்றுதான் இதுவும். ஒரு சிறிய சாவியைக் கொண்டு காரை இயங்க வைக்கும் புதிய முறையை விட, ஒரு பெரிய இரும்பு கம்பியால் திருகி காரை இயங்க வைக்கும் பழைய முறை சிறந்தது என வாதிடுபவரை நாம் ஒரு முட்டாள் என்றுதான் கருதுவோம்.
6. அதுபோல புதிதாக தோன்றிய மதம்தான் மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.
அதுபோல ஒரு மதம் சிறந்த மதமாக இருக்கிறது என்பதற்கு காரணம், அது புதிதாக தோன்றிய மதம் என்கிற அளவுகோலும் சரியானது அல்ல. 1999 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 CC மாருதிகார், 1997 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 5000 CC மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 SEL காரை விட   சிறந்தது என்று சொல்வது போன்றுதான் இதுவும். இரண்டு வாகனங்களில் சிறந்தது எது என்று மதிப்பிட வெண்டுமெனில், வாகனங்களை பற்றிய முழு விபரங்களையும் அறிய வேண்டும். உதாரணத்திற்கு – வாகனங்களின் ஓடும் திறன், வாகனங்களின் பாதுகாப்புத் தன்மை, வாகனத்தில் உள்ள இயந்திரம் இயங்கும் திறன், அவைகள் செல்லும் வேகம், அவைகளில் உள்ள வசதி போன்ற வாகனங்களின் அனைத்து விபரங்களையும் ஒப்பிட வேண்டும். அவ்வாறு ஒப்பிட்டு பார்த்தால், 1997 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 CC மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 SEL கார், 1999 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 CC மாருதிகாரை விட பன்மடங்கு சிறந்தது என்பது தெரிய வரும். 7. மனித குலத்தின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் மதமே, சிறந்த மதமாகும். இவ்வுலகில் வாழும் மனித குலத்தின் பிரச்னைகளுக்கு ஒரு மதம் தரும் நிரந்தர தீர்வுகள்தான், அந்த மதம் சிறந்த மதமாக கருதப்படக் கூடியதற்கு காரணமாக அமைய வேண்டும். எல்லா காலங்களிலும் பின் பற்றக் கூடிய அளவிற்கு, அந்த மதம் உண்மையான மதமாக இருக்க வேண்டும். இவ்வுலகில் வாழும் மனித குலத்தின் பிரச்னைகளான மது மற்றும் போதைப் பொருள்கள், அதிக சதவீத்தில் உள்ள பெண்கள், கொடுந்தொல்லைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இனவெறி, சாதிப்பிரச்னை போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது இஸ்லாமிய மார்க்கம் ஒன்றே.
இஸ்லாமிய மார்க்கம் உண்மையான மார்க்கம் ஆகும். அதன் சட்டங்களும், தீர்வுகளும், எல்லா காலத்திற்கும் ஏற்புடையது. இன்று உலகில் உள்ள வேதங்களில் இஸ்லாமிய மார்க்கத்தின் வேதமான அருள்மறை குர்ஆன்தான் இன்றுவரை அதன் தூய்மையையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கப்பட்ட வேதமாக உள்ளது. அருள்மறை குர்ஆனின் நம்பகத்தன்மையும், தூய்மையும் அருள்மறை குர்ஆன் இறை வேதம்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது. அத்துடன் எல்லா காலத்திற்கும் ஏற்ற வேதம் என்பதையும் நிரூபிக்கிறது. உதாரணத்திற்கு – அருள்மறை குர்ஆன் – அது இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்த அற்புதங்களுக்கு சவாலாக அமைந்தது. அது இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்த கவிதை, எழுத்தாற்றல் போன்ற இலக்கியங்களுக்கும் சவலாக விளங்கியது. இன்றைய காலகட்டத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கும் அருள்மறை குர்ஆன் ஓர் சவலாக அமைந்துள்ளது. அத்தோடு இஸ்லாமிய மார்க்கம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. இறைவனால் மனித சமுதாயத்திற்கு தரப்பபட்ட மார்க்கம்தான் இஸ்லாமிய மார்க்கம். இஸ்லாமிய மார்க்கம் மாத்திரம்தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய மார்க்கமும் ஆகும்.
கேள்வி எண்: 4.இந்து மதத்தில் இருப்பதுபோல் – இஸ்லாமிய மார்க்கத்தில் மறுபிறவி என்ற நம்பிக்கை இல்லையே. ஏன்? 
பதில்: விரைவில்.
கேள்வி எண்: 5.
இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர்களை எரித்துவிடாமல், மண்ணில் புதைப்பது ஏன்?.
பதில்: 1. மனித உடலில் உள்ள ஆக்கக்கூறுகள் மண்ணிலும் இருக்கின்றது. மனித உடலில் காணப்படும் தனிமப் பொருட்கள் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ மண்ணிலும் இருக்கின்றது. ஆகவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பது அறிவியல் ரீதியாக மிகச் சிறந்ததாகும். அவ்வாறு செய்வதால் இறந்து போன உடல் மிக எளிதாக மட்கிப் போய், மண்ணோடு மண்ணாக கலந்து விடும்.  
2. சுற்றுப்புறச்சூழல் மாசுபடுத்தப் படுவதில்லை. இறந்த உடலை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட காற்று, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், சுற்றுப்புறச் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பதால், சுற்றுப்புறச் சூழல் மாசு படுத்தப் படுவதில்லை.
3. சுற்றியுள்ள நிலம் வளம் பெறுகிறது: இறந்து போன உடலை எரிப்பதற்கென ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் பூமியின் பசுமைத் தன்மை குறைந்து வருகிறது. அத்துடன் மேற்படி செயல் சுற்றுப் புறச் சூழலுக்கு தீங்காக அமைவதுடன், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் இயற்கைச் சூழலும் பாதிப்படைகிறது. ஆனால் இறந்து போன உடல் மண்ணில் புதைக்கப்படுவதால், ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படுவதுடன், புதைக்கப்படும் இடத்தை சுற்றியுள்ள நிலமும் வளம் மிக்கதாக மாறி சுற்றுப் புறச் சூழலையும் மேம்படுத்துகிறது.
4. மிகக் சிக்கனமானது: இறந்து போன உடலை எரிப்பதற்கு, குவிண்டால் கணக்கில் விறகுகள் வீணாக்கப்படுகின்றது. இந்தியாவில் இறந்து போன உடலை எரிப்பதற்கு மாத்திரம் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்படுகிறது. ஆனால் இறந்து போன உடலை, மண்ணில் புதைக்க மிகக் குறைந்த செலவுதான் ஆகும். எனவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பது, மிகச் சிக்கனமானது.
5. இறந்து போன உடல்களை புதைப்பதற்காக மீண்டும், மீண்டும் ஒரே நிலத்தை பயன்படுத்தலாம். இறந்து போன உடலை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விறகுகளை, மீண்டும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இறந்து போன உடலை எரிக்கும்போது விறகுகள் சாம்பலாகி விடும். ஆனால் இறந்து போன உடலை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நிலத்தையே – மீண்டும் சில வருடங்கள் கழித்து வேறொரு உடலை புதைக்க பயன்படுத்த முடியும். ஏனெனில் புதைக்கப்பட்ட மனித உடல் மக்கி, மண்ணோடு மண்ணாக கலந்து விடும்.
கேள்வி எண்: 6 திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் திலகம் இடுவது – பொட்டு வைப்பது – தாலி அணிந்து கொள்வது போன்று, திருமணமான இஸ்லாமிய பெண்கள் – நெற்றியில் பொட்டு வைப்பதோ – தாலி அணிந்து கொள்வதோ இல்லையே. ஏன்?
பதில்: 1. பொட்டு (“பிந்தி”) அல்லது திலகம் (“திக்கா”) “பிந்தி” என்கிற ஹிந்தி வார்த்தை புள்ளி என்று பொருள் தரக்கூடிய (“பிந்து”) என்கிற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. வழக்கமாக இந்த வட்ட வடிவ பொட்டு குங்குமப் பொடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஒளிமிக்க குங்குமத்தை இந்து மதத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள்.
10 மேற்படி “பிந்தி” இந்துக்கள் பெண்கடவுளாக எண்ணி வழிபடும் பார்வதியின் அடையாளமாக – இந்துக்களால் கருதப்படுகிறது. மேற்படி பொட்டு பெண்களின் சக்தியாகவும், அந்த சக்தி மணமான பெண்களையும், அவர்களது கணவர்களையும் பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது. மேற்படி பொட்டு திருமணமாக பெண்களுக்கு அடையாளமாக கருதப்படுவது இந்துக்களின் கலாச்சாரமாகும். இதனை நெற்றித் திலகம் என்றும் அழைக்கின்றனர்.
2. பொட்டு அல்லது திலகம் அணிவது நாகரீகமாகி வருகிறது. இன்றைய கால கட்டத்தில் பொட்டு அல்லது திலகம் அணிவது நாகரீமாகி வருவதுடன், திருமணம் ஆகாத பெண்களும் பொட்டு அணிவது வழக்கத்திலிருக்கிறது. அதன் வட்ட வடிவ அமைப்பு உட்பட இப்போது பல வடிவங்களாக – உதாரணத்திற்கு நட்சத்திர வடிவிலும், இதய வடிவிலும் – உள்ளது. அதன் வர்ணமும் சிவப்பு நிறம் தவிர, நீல நிறத்திலும், பச்சை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் உள்ளது. குங்குமம் என்கிற பொடி வடிவம் தவிர, பல வடிவங்களிலும் கிடைக்கிறது. உதாரணத்திற்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர் வடிவிலும், பிளாஸ்டிக் ஸ்டிக்கர் மற்றும் கண்ணாடியும் இணைந்த கலவையாகவும் கிடைக்கிறது.
3. மாங்கல்யம் அல்லது தாலி. மாங்கல்யம் அல்லது தாலி என்பது நல்லெண்ணத்தோடு அணியப்படும் ஒரு அணிகலன் ஆகும். திருமணம் ஆகிவிட்டது என்பதன் அடையாளச் சின்னமாக பெரும்பாலான இந்து பெண்கள் தங்கள் கழுத்தில் அணியக் கூடிய ஆபரணம் மாங்கல்யம் ஆகும். இரட்டைவட கருப்பு நிற பாசி மாலையும், அதன் நடுவில் தொங்கும் தங்கத்தால் ஆன பதக்கமும் இதன் வடிவமைப்பாகும். மாங்கல்யத்தில் இருக்கும் கருப்பு நிற பாசிகள் தீமையிலிருந்து தங்களை பாதுகாக்கும் என்கிற நம்பிக்கையில் மாங்கல்யம் அணியப்படுகிறது. தவிர தங்களது கணவரையும், தங்களது திருமணத்தையும் மேற்படி மாங்கல்யம் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையிலும் அணியப்படுகிறது. தென்னிந்தியாவில் மாங்கல்யத்தை – தாலி – என்று அழைக்கின்றனர். மேற்படி தாலி – ஒரு தங்கத்தால் ஆன பதக்கம், மஞ்சள் நிற நூல் சரடிலோ அல்லது தங்கச் சரடிலோ இணைக்கப்பட்டிருக்கும்.
இந்து மதத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் தாலியை அல்லது மாங்கல்யத்தை ஒருபோதும் தங்களது கழுதிலிருந்து கழற்றுவதில்லை. கணவரை இழந்த பெண்கள் விதவையாகும்போது மட்டுமே மேற்படி தாலி அல்லது மாங்கல்யம் அவர்களிடமிருந்து பிரிக்கப்படும்.
4. அல்லாஹ்வே அனைவரையும் பாதுகாப்பவன்: படைத்த அல்லாஹ்வே, மனிதர்களை பாதுகாக்கவும் போதுமானவன். நம்மை தீமையிலிருந்து பாதுகாக்க சிவப்பு நிற குங்குமமோ அல்லது கருப்பு நிற பாசிகளோ தேவையில்லை. அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்-ஆம் -ன் 14வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“(நபியே!, நீர் கூறுவீராக!) வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலான எடுத்துக் கொள்வேனா?.” (அல்குர்ஆன் 6:14) தவிர மேற்படி கருத்துடைய வசனங்கள் அருள்மறை குர்ஆனின் பிற அத்தியாயங்களிலும் உள்ளது: குறிப்பாக அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் மூன்று ஸுரத்துல் ஆல-இம்ரானின் 150வது வசனமும், அத்தியாயம் இருபத்தி இரண்டு ஸுரத்துல் ஹஜ்ஜின் 78வது வசனமும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றன:  
‘அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.”
தாலி அணிவதும், பொட்டு வைப்பதும் நம்மைப் படைத்து பரிபாலித்து, பாதுகாக்கும் அல்லாஹ் மீது நம்பிக்கை இல்லை என்பதையே உணர்த்துகிறது.
5. இஸ்லாமிய ஆடை முறைகளுக்கு எதிரானது: தாலி அணிவதும், பொட்டு வைப்பதும் இந்துப் பெண்களுக்கு உரிய அடையாளம். இஸ்லாமிய ஆடைமுறை – மாற்று மதத்தவர்கள் சில முக்கியத்துவம் கருதி அணிகின்ற எந்த முத்திரையையும், அல்லது எந்த அடையாளத்தையும் – இஸ்லாமியர்கள் அணிவதை ஒருபோதும் அனுமதிப்பது இல்லை.
6. திருமணம் ஆன பெண்களாக இருந்தாலும், திருமணம் ஆகாத பெண்களாக இருந்தாலும் – பெண்கள் கேலி செய்யப்படுவதை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. திருமணம் ஆன பெண்கள் தாலி அணிவதால் திருமண ஆன பெண் என்பதை எளிதாக அடையாளம் கண்டு கொள்வதற்கு ஏதுவாக இருப்பதோடு, அவர்கள் கிண்டலும், கேலியும் செய்யப்படுவதிலிருந்து தவிர்க்கப்படுவார்கள் என்று தாலி அணிவதின் பயனைப் பற்றி சொல்லும் போது எனது இந்து நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு பெண்களும் – அவர்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் சரி, அல்லது அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அல்லது அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி, எந்த ஒரு பெண்ணும் கேலி செய்யப்படுவதையோ அல்லது கிண்டல் செய்யப்படுவதையோ இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
கேள்வி எண்: 7. முஸ்லிம்கள் தொழுகைக்காக அழைக்கும் பொழுது, இந்தியாவில் வாழ்ந்து மறைந்த அக்பர் பேரரசரின் பெயரை எதற்காக சொல்கிறீர்கள்?.
பதில்: 1. இஸ்லாமியர்கள் தொழுகைக்காக அழைக்கும் பொழுது, அக்பர் பேரரசரின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்கிற தவறான கருத்தை முஸ்லிம் அல்லாதவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை நான் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டேன். நான் உரையாற்றத் துவங்குவதற்கு முன், முஸ்லிமல்லாத அமைச்சர் ஒருவர், இந்தியாவை முன்னேற்றியதில் இஸ்லாமியர்களின் பங்கு பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரையாற்றும்போது – இந்தியாவை ஆண்ட மன்னர்களில் சிறந்தவர் அக்பர் பேரரசர். ஆகவேதான் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக அழைக்கும் பொழுது, அக்பர் பேரரசரின் பெயரை ஒவ்வொரு நாளும் ஐந்து முறை உச்சரிக்கிறார்கள் என்றும், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டார். நான் உரையாற்றும்போது மேற்படி அமைச்சர் கொண்டிருந்த கருத்து, தவறு என்பதை விளக்கினேன்.
2. தொழுகைக்காக அழைக்கும்போது உச்சரிக்கப்படுகிற “அக்பர்” என்கிற வார்த்தைக்கும் – இந்தியாவை ஆண்ட மன்னர் அக்பருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொழுகைக்காக மக்களை அழைக்கும்போது உச்சரிக்கப்படுகிற ‘அக்பர்” என்கிற வார்த்தைக்கும் – இந்தியாவை ஆண்ட மன்னர் அக்பருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘அக்பர்” என்கிற அரபி வார்த்தை, மன்னர் அக்பர் இவ்வுலகில் பிறக்கும் முன்பிருந்தே, பல நூற்றான்டுகளாக இஸ்லாமியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
3. ‘அக்பர்” என்கிற அரபி வார்த்தைக்கு ‘மிகப் பெரிய” என்று பொருள். ‘அக்பர்” என்கிற அரபி வார்த்தைக்கு ‘மிகப்பெரிய” என்று பொருளாகும். தொழுகைக்காக மக்களை அழைக்கும்பொழுது உச்சரிக்கப்படுகின்ற ‘அல்லாஹுஅக்பர்” என்கிற வார்த்தைக்கு அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பொருள். எவருக்கும் அல்லது எதற்கும் இணையில்லாத மிகப் பெரியவனாகிய அல்லாஹ்வைத் தொழுவதற்கு வாருங்கள் என்று மக்களை அழைப்பதற்கு மேற்படி வார்த்தைகள் பயன் படுத்தப்படுகிறது.
கேள்வி எண்: 8. சொத்து, திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது, குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?. (உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)
பதில்: 1. இஸ்லாமிய தனியார் சட்டம்: தனியார்சட்டம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதருக்கும், அவருக்கு நெருங்கிய பந்தம் உடையவர்களுக்கும் – இடையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும். உதாரணத்திற்கு திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்கள், விவாகரத்து சம்பந்தப்பட்ட சட்டங்கள், சொத்து விவகாரங்கள் போன்றவை. மேற்படி சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேற்படி சட்டங்கள் முழு சமுதாயத்தையும் நேரடியாக பாதிக்கக் கூடிய செயலாகவோ அல்லது குற்றவியல் சம்பந்தப் பட்டதாகவோ இருக்கக் கூடாது.
2. இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு. எந்த ஒரு நாடானாலும், தனியார் சட்டம் என்பது, ஒவ்வொரு சமுதாய மக்களுக்கிடையேயும், ஒவ்வொரு குழுவுக்கும் இடையேயும் வேறுபடலாம். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருப்பதால் – ஒவ்வொரு சமுதாயமும் – அவர்கள் விரும்பும் பட்சத்தில் – அவர்கள் விரும்பும் தனியார் சட்டத்தை பின்பற்ற – இந்தியாவின் சிவில் உரிமைச் சட்டம் அனுமதியளித்துள்ளது.
3. இஸ்லாமிய தனியார் சட்டமே மிகச் சிறந்த தனியார் சட்டம்: உலகத்தில் உள்ள விதவிதமான தனியார் சட்டங்களில் – மிகச் சிறந்ததும், பலனைத் தரக்கூடியதுமான தனியார் சட்டம் – இஸ்லாமிய தனியார் சட்டமே என்கிற நம்பிக்கை இஸலாமியர்களிடையே உள்ளது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் – இஸ்லாமிய தனியார் சட்டத்தை பின்பற்றுவதற்கு, அவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் காரணமாகும்.
4. குற்றவியல் சட்டம்: குற்றவியல் சட்டம் என்பது சமுதாயத்தை நேரடியாகப் பாதிக்கக் கூடிய ஒரு செயல் அல்லது குற்றம் சம்பந்தப்பட்டது ஆகும். உதாரணத்திற்கு கொலை, கொள்ளை, வல்லுறவு (கற்பழிப்பு) போன்றவையாகும்.  
5. குற்றவியல் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். எந்த நாடாக இருந்தாலும், குற்றவியல் சட்டமானது, வித்தியாசமான பல சமுதாயத்திற்கு பல விதமான சட்டம் என்னும் தனியார் சட்டம் போலில்லாமல், எந்த சமுதாயமாக இருந்தாலும் அல்லது சமுதாயத்தின் எந்த குழுவாக இருந்தாலும் குற்றவியல் சட்டம் என்பது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மனிதன் திருடினால் அவனது கையை வெட்டுமாறு பணிக்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம். ஆனால் மேற்படி சட்டம் இந்து குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. உதாரணத்திற்கு சமுதாயத்தில் உள்ள ஒரு இந்து, ஒரு இஸ்லாமியரிடம் திருடி விட்டார் எனில், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை என்ன?. இஸ்லாமியர் இஸ்லாமிய குற்றவியல் சட்டப்படி திருடியவரின் கை வெட்டப்பட வேண்டும் என்பதை விரும்புகிறார் எனில், இந்து குற்றவியல் சட்டம் அதை அனுமதிப்பதில்லை.
6. இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை உட்படுத்தாமல், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரம், தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை பின்பற்ற முடியாது.
ஒரு முஸ்ஸிம் அவரைப் பொருத்த மட்டில், அவர் செய்துவிட்ட குற்றத்திற்கு தண்டனையாக – இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி, தண்டனை பெற விரும்புவார் எனில் – அது நடைமுறையில் சாத்தியக் கூறானதல்ல. ஒரு முஸ்லிம் கொள்ளையடித்து விட்டதாக குற்றம் சாட்டுப்படுவார் எனில் – அந்த குற்றச்சாட்டின் சாட்சி முஸ்லிம் அல்லாதவராக இருப்பார் எனில், முஸ்லிமும், முஸ்லிம் அல்லாதவரும், தத்தம் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த விரும்பினார்கள் எனில் – இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் படி பொய் சாட்சியம் சொன்னவருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் இந்திய குற்றவியல் சட்டப்படி பொய் சாட்சி சொல்பவர் தண்டனையிலிருந்து எளிதாக தப்பிவிட முடியும்.
இவ்வாறாக ஒரு முஸ்லிமும் – ஒரு முஸ்லிம் அல்லாதவரும் தத்தம் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால் – முஸ்லிம் அல்லாத ஒருவர் – குற்றம் செய்யாத முஸ்லிம் ஒருவரை, எளிதாக குற்றவாளி ஆக்கிவிட முடியும். எப்படி இருப்பினும், இரண்டு பேருமே இந்திய குற்றவியல் சட்டத்தை பின்பற்றுவார்கள் எனில் – இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கொள்ளை அடிப்பவருக்கும், பொய்சாட்சியம் சொல்பவருக்கும் தண்டனை அத்தனை கடுமையானதாக இல்லை. இவ்வாறு கடுமையான தண்டனை இல்லாத சட்டம் கொள்ளை அடிப்பவனை தங்களது சுய லாபத்திற்காக மேலும் கொள்ளை அடிக்கச் செய்யத் தூண்டவும், பொய் சாட்சியம் சொல்பவனை மேலும் பொய்சாட்சியம் சொல்ல வைக்கவும் காரணமாக அமைந்துள்ளது.
7. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், இந்தியர்கள் அனைவர் மீதும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைபடுத்தப் படுவதைத்தான் விரும்புவார்கள். முஸ்லிம்கள் என்கிற முறையில் இந்தியாவிலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைபடுத்தப் படுவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் – திருடினால் கையை வெட்டுவது என்கிற இஸ்லாமிய குற்றவியல் சட்டம் – கண்டிப்பாக திருட்டின் சதவீதத்தை குறைக்கும். அதுபோல பொய் சாட்சியம் சொல்பவருக்கு 80 கசையடிகள் என்கிற சட்டம் – ஒரு மனிதன் பொய் சாட்சியம் சொல்வதை கண்டிப்பாக தடுக்கும்.
8. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு மிகவும் எனிதானது: இஸ்லாம் ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல், அந்த குற்றம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் காட்டித் தருகிறது. உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது, வல்லுறவு கொள்பவனுக்கு மரண தண்டனை போன்றவை, அதுபோன்ற குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைகிறது. அதுபோன்ற குற்றங்களை செய்ய நினைப்பவனை – பல நூறுமுறை – சிந்திக்க வைக்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்.
இவ்வாறு இந்தியாவில் குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று எண்ணிணால் -இந்தியாவில் பொது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை – நடைமுறை படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.
கேள்வி எண்: 9. இஸ்லாத்தின் கருத்துப்படி உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?.
பதில்: 1. ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்: அருள்மறை குர்ஆனின் 35வது அத்தியாயம்ஸுரத்துல் ஃபா(த்)திரின் 24வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகிறது:
“..அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை..(அல்குர்ஆன் – 35:24)
அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம்ஸுரத்துல் ரஃதுவின் 07வது வசனமும் கீழ்கண்டவாறு கூறுகிறது:
..மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டி உண்டு.. (அல்குர்ஆன் – 13:7)
2. ஒரு சில இறைத்தூதர்களின் வரலாறு மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது:
அ. அருள்மறை குர்ஆனின் 4வது அத்தியாயம் ஸுரத்துன்னிஷாவின் 164வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்: இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்: ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை.” (அல்குர்ஆன் – 4:164)
ஆ. அருள்மறை குர்ஆனின் 40வது அத்தியாயம்ஸுரத்துல் முஃமின் – னின் 78வது வசனமும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்: இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்..(அல்குர்ஆன் – 40:78)
3. இருபத்து ஐந்து இறைத்தூதர்கள் பெயர்கள் மாத்திரம் அருள்மறை குர்ஆனில்  
நபி முஹம்மது (ஸல்), நபி ஆதம் (அலை), நபி நூஹ் (அலை), நபி இபுறாஹிம் (அலை), நபி மூஸா (அலை), நபி ஈஸா (அலை) ஆகிய இறைத்தூதர்களின் பெயர்கள் உட்பட இருபத்து ஐந்து இறைத்தூதர்களின் பெயர்கள் மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் இறைத்தூதர்கள்: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட மொத்த இறைத்தூதர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் ஆகும்.(1,24,000)
5. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும், அவர்களின் காலத்தில் உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஆவார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும், அவர்களின் காலத்தில் உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஆவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் பின்பற்றப் படக்கூடியவர்களாக அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம்ஸுரத்துல் ஆல இம்ரானின் 49வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“..இஸ்ராயீலின் சந்ததியினருக்கு தூதராகவும் அவரை ஆக்குவான்.. (அல்குர்ஆன் – 3:49) 6. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறுதியான இறைத்தூதர். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறுதியான இறைத்தூதர் ஆவார்கள். இது பற்றி அருள்மறை குர்ஆனின் 33வது அத்தியாயம்ஸுரத்துல் அஹ்ஜாப் – ன் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
‘முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்: மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.” (அல்குர்ஆன் – 33:40)
7. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்பதால், அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மாத்திரமோ அல்லது அரேபியர்களுக்கு மாத்திரமோ அனுப்பட்ட இறைத்தூதர் அல்ல. முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஆவார்கள். இது பற்றி அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம்ஸுரத்துல் அன்பியாவின் 107வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ‘ரஹ்மத்”தாக அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (அல்குர்ஆன் – 21:107)
மேற்படி போன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 34வது அத்தியாயம்ஸுரத்துஸ் ஸபாவின் 28 வசனத்தின் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இன்னும்,(நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாறாயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாறும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.” (அல்குர்ஆன் – 34:28)
அ“ஒவ்வொரு இறைத்தூதரும் அவர்களுடைய சமுதாயத்திற்கு மாத்திரம் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் முழு மனித சமுதாயத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்,” என்கிற செய்தியை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக ஜாபிர் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் ஹதீஸ் புத்தகத்தின் – முதலாம் பாகத்தில் – 56வது அத்தியாயமான தொழுகை என்னும் தலைப்பின் கீழ் 429 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆ. இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?. என்கிற கேள்வியை எடுத்துக் கொண்டால் – இந்தியாவுக்கு என்று அனுப்பப்பட்ட இறைத்தூதர் பற்றி அருள்மறை குர்ஆனிலோ, அல்லது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்புகளிலோ சொல்லப்படவில்லை. ராமருடைய பெயரும், கிருஷ்ணருடைய பெயரும் – குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ எங்குமே குறிப்பிடப் படவில்லை என்பதால் – அவர்கள் இறைத்தூதர்களா?. இல்லையா என்பதை பற்றி யாரும் நிச்சயமாக சொல்ல முடியாது. சில இஸ்லாமியர்கள் – குறிப்பாக சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் இந்துக்களை திருப்திபடுத்த வேண்டி ராம் (அலை) என்று (அல்லாஹ் – ராமர் மீது அருள் புரியட்டும்) சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறாகும். ராமர் இறைத்தூதர் என்பதற்கு அருள்மறை குர்ஆனிலிருந்தோ அல்லது ஹதீஸிலிருந்தோ சரியான ஆதாரம் எதுவும் இல்லை. ஒருவேளை அவர்கள் இறைத்தூதராக இருக்கலாம் என்று யாராவது ஒருவர் சொன்னாலும், சொல்லலாம்.
9. ராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதராக இருந்திருந்தால் கூட, இன்றைக்கு நாம் இறைத்தூதராக ஏற்று பின்பற்றி நடக்கக் கூடியவர் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான். ராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதராக இருந்திருந்தால், அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் உள்ளவர்கள் மாத்திரம்தான், அவர்களை தூதர்களாக எண்ணி பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் இன்று, இந்தியாவில் உள்ளவர்கள் உட்பட உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களைத்தான் தூதராக ஏற்று நடக்க வேண்டும்.
கேள்வி எண்: 10 இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?.
பதில்: 1. ஒவ்வொரு காலகட்டத்திலும், இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டுள்ளது: அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம்ஸுரத்துர் ரஃதுவின் 38வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
‘..ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது..” (அல்குர்ஆன் – 13:38)
2. அருள்மறை குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இறை வேதங்கள் நான்கு: தௌராத் – ஷபூர் – இன்ஜில் – மற்றும் குர்ஆன் என நான்கு இறை வேதங்களின் பெயர்கள் மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. தௌராத் வேதம் நபி மூஸா (அலை) அவர்களுக்கும், “ஷபூர் வேதம் நபி தாவ+த் (அலை) அவர்களுக்கும், இன்ஜில் வேதம் நபி ஈஸா  (அலை) அவர்களுக்கும், இறுதிவேதமான அருள்மறை குர்ஆன் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அருளப்பட்ட வேதங்களாகும்.
3. அருள்மறை குர்ஆனுக்கு முன்னால் அனுப்பப்பட்ட வேதங்கள் அனைத்தும் – அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்காக அனுப்பப்பட்டதாகும். அருள்மறை குர்ஆனுக்கு முன்னால் அனுப்பப்பட்ட வேதங்கள் அனைத்தும் – அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்காக, அவர்களுக்குரிய காலத்தில் பின்பற்றப் படுவதற்காக மாத்திரம் அனுப்பப்பட்டதாகும்.
4. அருள்மறை குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைவேதமாகும். அருள்மறை குர்ஆன், இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்ட இறுதி வேதம் என்பதால், அது முஸ்லிம் சமுதாயத்திற்கு மாத்திரமோ அல்லது அரேபியர்களுக்கு மாத்திரமோ அனுப்பப்பட்ட இறைவேதம் அல்ல. இவ்வுலகில் உள்ள முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைவேதம்தான் அருள்மறை குர்ஆன்.
அ. இதைப் பற்றிய செய்தியை அருள்மறை குர்ஆனின் 14வது அத்தியாயம்ஸுரத்துல் இபுறாஹீம் – ன் முதலாவது வசனம் கீழ்கண்டவாறு அறிவிக்கிறது:
“அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும். மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின்பால் நீர் கொண்டு வருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்…(அல்குர்ஆன் – 13:38)
ஆ. இதே போன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 14வது அத்தியாயம்ஸுரத்துல் இபுறாஹீம் – ன் 52 வது வசனத்திலும் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும், (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். ..(அல்குர்ஆன் – 13:38)
இ. அருள்மறை குர்ஆனின் 02வது அத்தியாயம்ஸுரத்துல் பகராவின் 185 வது வசனத்திலும் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான)வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளை கொண்டதாகவும்: (நன்மை, தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்டது…. (அல்குர்ஆன் –2:185)
ஈ. மேற்படி போன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 41 வது வசனத்திலும் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்..”(அல்குர்ஆன் –39:41)
5. எந்த இறைவேதம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது?. இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?. என்கிற கேள்வியை பொருத்தமட்டில் – அருள்மறை குர்ஆனிலோ அல்லது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்புகளிலோ இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆகவே அருள்மறை குர்ஆனிலோ அல்லது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்புகளிலோ இந்து வேதங்களை பற்றியோ அல்லது மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்கள் பற்றியோ குறிப்பிடப்படாததால், அவைகள் இறைவேதம்தான் என்று நிச்சயமாக யாரும் சொல்ல முடியாது. அவைகள் இறைவேதங்களாக இருந்தாலும் இருக்கலாம். அல்லது இறைவேதங்களாக இல்லாமலும் இருக்கலாம்.
6. இந்து வேதங்கள் இறைவேதங்களாக இருந்திருந்தாலும், இன்று நீங்கள் இறைவேதமாக ஏற்று, பின்பற்ற வேண்டியது அருள்மறை குர்ஆனைத்தான்.
இந்து வேதப் புத்தகங்களோ அல்லது வேறு வேதப்புத்தகங்களோ, இறைவேதமாக இருந்திருந்தால், அந்த வேதங்கள் அந்த காலத்தில் வாழ்ந்திருந்த மக்களுக்காக- அவர்கள் வாழ்ந்திருந்த அந்த குறிப்பிட்ட காலத்தில் மாத்திரம் பின்பற்றப்படுவதற்காக  அனுப்பப்பட்டதாகும். இன்று, இந்தியா உட்பட உலகத்தில் உள்ள மனித குலம் முழுவதும் இறைவனின் இறுதி வேதமாம் அருள்மறை குர்ஆனை மாத்திரமே பின்பற்ற வேண்டும். அதோடு இல்லாமல் – அருள்மறை குர்ஆனுக்கு முந்தைய எல்லா வேதங்களும் நிலையாக பின்பற்றப் படக்கூடாது என்கிற காரணத்திலோ என்னவோ – வல்லோன் அல்லாஹ் – அவ்வேதங்களை அவை இறக்கியருளப்பட்ட அவைகளின் உண்மையான வடிவிலே பாதுக்காக்கவில்லை போலும். அருள்மறை குர்ஆனைத் தவிர, உலகில் உள்ள முக்கிய மதங்களின் இறைவேதங்கள் என்று சொல்லப்படுகின்ற எதுவும், மாற்றப்படாமலோ, கலப்படம் செய்யப்படாமலோ, இடைச் செருகல்கள் செருகப்படாமலோ இல்லை. அருள்மறை குர்ஆன் நிலையாக பின்பற்றப் படவேண்டும் என்கிற காரணத்தினால் அருள்மறை குர்ஆன், அதன் உண்மையான வடிவம் அழியாமல் இருக்கவும், எவ்வித தீங்கும் நேராமல் இருக்கவும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருக்கிறான். அருள்மறை குர்ஆனின் 15வது அத்தியாயம் ஸ_ரத்துல் ஹிஜ்ரின் 09வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்: நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்..” (அல்குர்ஆன் –15:9)

தமிழாக்கம்: அபூ இஸாரா

No comments:

Post a Comment