நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் ஆரம்பத்தில் தூங்கச் செல்வார்கள். நடு இரவுக்குப்பின் அதாவது பின்னிரவில் தொழுகைக்காக எழுந்து கொள்வார்கள்.
o எப்போதும் வலதுபுறம் ஒருக்கணித்துப் படுப்பார்கள். இன்னும் வலது கையின் உள்ளங்கைமீது வலது கன்னத்தை வைத்துப் படுத்துக் கொள்வார்கள்.
o யாராவது முகங்குப்புற படுத்திருந்தால் மிகவும் அதிருப்தி அடைவார்கள். தங்களின் பாதங்களால் அவருடைய பாதத்தில் தட்டி எழுப்பவார்கள்.
o நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நேரங்களில் பேரிச்சைமரப் பட்டைகளின் சீவல்கள் நிரப்பப்பட்ட மெத்தைகளில் படுத்திருக்கிறார்கள். இன்னும் சிலநேரங்களில் புற்கள் நிரப்பப்பட்ட மெத்தைகளிலும், சிலநேரங்களில் ஈச்சமட்டைகளால் பின்னப்பட்ட பாய்களிலும், சிலநேரங்களில் தோல்விரிப்புகளிலும், சிலநேரங்களில் துணியைக் கீழே விரித்தும், சிலநேரங்களில் வெறும் தரையிலும் படுதிருக்கிறார்கள்.
o சிலநேரங்களில் இரண்டாக மடிக்கப்பட்ட போர்வைகளில் படுப்பார்கள். நான்காக மடிக்க வேண்டாம் என்று கூறுவார்கள்.
o நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கும்போது அவர்களின் மூச்சு சற்று மெல்லிய சப்தத்துடன் வெளியாகும்.
o நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலநேரங்களில் மல்லார்ந்து கால்களை நீட்டி படுப்பார்கள். அப்போது ஆடைகள் விலகாமல் இருக்க ஒரு கால் மீது இன்னொரு காலை வைத்துக் கொள்வார்கள். அவ்வாறின்றி யாரும் மல்லாந்து படுத்தால் ஆடைகள் விலக வாய்ப்பு இருப்பதால் அதை தடை செய்வார்கள்.
o இஷா தொழுகைக்கு முன் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் தூங்கியதே இல்லை.
o கொஞ்சங்கூட விளக்கு வெளிச்சம் இல்லாத கடும் இருளில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தூங்கமாட்டார்கள்.
o மனைவியுடன் இல்லறத்துக்குப்பின் தூங்க விரும்பினால் முதலில் சிறுநீர் கழித்து மறைவிடங்களை துப்புரவு செய்து பிறகு உளூச் செய்விட்டே தூங்குவார்கள். பொதுவாக பெரும்பாலும் தூங்குவதற்குமுன் உ
ளூச் செய்து கொள்ளும் பழக்கம் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தது.
o இரவின் நடுவில் மல ஜல தேவைகளுக்குச் சென்றால் மீண்டும் கை முகம் கழுவிக்கொண்டு படுப்பார்கள்.
o தூங்கும்முன் சட்டையை கழற்றி மாட்டிவிட்டு இரவுக்கான கைலியை அணிந்துகொண்டு படுப்பார்கள்.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரத்தாலான ஒரு பாத்திரத்தை வைத்திருந்தார்கள். எப்போதாவது சிலநேரங்களில் இரவில் அதில் சிறுநீர் இருந்து கொள்வார்கள்.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படுக்கையின் தலைப்பக்கத்தில் கருப்புநிற சுர்மாக்கூடு இருக்கும். ஒவ்வொரு இரவும் தூங்கும்முன் சுர்மா இட்டுக் கொள்வார்கள். ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று தடவை சுர்மா இடுவார்கள்.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கும்முன் குடும்பத்தினருடன் சற்று நேரம் உரையாடுவார்கள். வீட்டு விஷயங்கள் மற்ற முஸ்லிம்களைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பேசுவார்கள்.
o ஒவ்வொரு இரவிலும் தூங்கும்முன் ஸூராத்துல் இக்லாஸ் (குல்ஹுவல்லாஹு), ஸூரத்துல் ஃபலக் (குல் அஊது பிரப்பில் ஃபலக்), ஸூத்துன்னாஸ் (குல் அஊது பிரப்பின்னாஸ்) இம்மூன்றையும் ஓதி கைகளில் ஊதி முகம் மற்றும் தலையில் தேய்த்து பிறகு உடல் முழுவதும் தேய்த்துக் கொள்வார்கள். இவ்வாறு மூன்றுமுறை செய்வார்கள்.
o தூங்கும்முன் ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா’ என்றும் ஓதிக்கொளவார்கள்.
o நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூக்கத்தைவிட்டு எழுந்ததும்,
‘அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமா(த்)தனா வஇலைஹின்னுஷூர்’
(‘எங்களை மரணிக்கச்செய்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பிய இறைவனுக்கே எல்லாப்புகழும்’) என்று கூறுவார்கள்.
Source: www.nidur.info
No comments:
Post a Comment