நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதீனாவுடைய ‘ஹர்ரா’ என்ற (கறுப்புக்கற்கள்) நிறைந்த பூமியில் நடந்து கொண்டிருந்தேன். வழியில் உஹது மலை எமக்கு எதிர்ப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூதர்ரே! என்று அழைத்தார்கள். நான் இதோ ஆஜராகி இருக்கிறேன்.
யாரஸ¥லல்லாஹ்! என்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் "இந்த உஹதின் அளவு தங்கம் இருந்து கடனை அடைப்பதற்காகவேயன்றி அதில் ஒரு தீனாரையாவது என்னிடம் வைத்துக் கொண்டு மூன்று இரவுகள் கழிவதையும் நான் விரும்பவில்லை. மாறாக அல்லாஹ்தலாவின் அடியார்களுக்கு இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் செலவழித்துவிடவே விரும்புகிறேன்". என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் காட்டினார்கள்.
முன்னால் நடந்து கொண்டே "நிச்சயமாக இப்போது அதிகமான பொருள் வைத்திருப்பவர்கள்தான் கியாமத்துடைய நாளில் மிகக்குறைவான நன்மைகள் வைத்திருப்பார்கள். அவர்களில் தனது பொருளை இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் கொடுத்தவர்களைத்தவிர" என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் பின்புறமாகவும் காட்டிவிட்டு அப்படியானவர்கள் குறைவானவர்களே" என்று கூறினார்கள்.
பின்னர் என்னை நோக்கி "நான் திரும்பும் வரை இதே இடத்தில் இருந்து கொள்ளும்" என்று கூறிவிட்டு இரவின் இருளில் மறையும் வரை தொடர்ந்து நடந்தார்கள். அப்போது நான் உயர்ந்த சப்தம் ஒன்றைக் கேட்டேன். அதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு யாரேனும் இடையூறு செய்துவிட்டார்களோ என்று அஞ்சி அவர்களிடம் செல்வதற்கு நினைத்தேன்.
எனினும், நான் உம்மிடம் திரும்பி வரும்வரை அங்கிருந்து நான் நகரவில்லை. நபியவர்கள் வந்ததும் அவர்களிடம் "நான் ஒரு சப்தத்தைக் கேட்டு அதனால் பயந்துவிட்டேன்." என்று அச்சந்தர்ப்பத்தைப்பற்றி கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீர் அதனைக் கேட்டீரா?" என்று கேட்க, நான் "ஆம்" என்று கூறினேன்.
அது ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் ஆவார். என்னிடம் அவர்கள் வந்து "அல்லாஹ்வுத்தஆலாவுக்கு எதையும் இணைவைக்காமல் உமது உம்மத்தில் யார் மரணிக்கிறாரோ, அவர் சுவர்க்கத்தில் நுழைந்துவிடுவார்" என்று கூறினார்கள். அதற்கு நான் "அவர் விபச்சாரம் செய்திருந்தாலுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ஆம். விபசாரம் செய்திருந்தாலும் சரி, திருடியிருந்தாலும் சரி என்று கூறினார்கள்.
இறைவனுக்கு இணை வைக்காமல் வாழ்வோம்
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின்
மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.
1) இணைவைத்தலின் தீமைகள்:
ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
1. இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
2. இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது
3. இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க் – இணைவைத்தல்:
அல்லாஹ் கூறுகிறான்:
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65 & 66)
இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்:
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )
No comments:
Post a Comment